39 வருடங்களுக்கு பிறகு...சீக்கிய கலவர வழக்கில் அதிரடி.

x

1984ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் நாட்டின் பல இடங்களில் நடந்த வன்முறைகளில் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லரின் தூண்டுதலால், இந்த வன்முறை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ விசாரித்து வந்த நிலையில், ஜெகதீஷ் டைட்லர் கொலை குற்றவாளி என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி நீதிமன்றத்தில் ஜெகதீஷ் டைட்லர் முன்ஜாமின் கோரியிருந்த நிலையில், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்