124 நாளுக்கு பின் பூமிக்குள் கட்டுப்பாடின்றி விழுந்த சந்திரயான்-3 பாகம்.. உறுதிசெய்த இஸ்ரோ

x

சந்திராயன் 3 விண்கலம் LVM3 M4 ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் விண்வெளியில் செயலிழந்த ராக்கெட்டின் ஒருங்கிணைந்த சில பாகங்கள், விண்ணில் ஏவப்பட்ட 124 நாட்களுக்கு பின் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் கட்டுப்பாடின்றி நுழைந்தன. அவை நேற்று மதியம் 2.40 மணியளவில் வடக்கு பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாக விழுந்ததாக தகவல் வெளியானது. அதனை இஸ்ரோ உறுதி செய்த நிலையில், சர்வதேச விண்வெளி அமைப்பின் வழிகாட்டுதலின் படி ராக்கெட் அமைப்பு செயலிழக்க வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விண்வெளி நடவடிக்கைகளின் நீண்டகால நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கான நிலைப்பாட்டை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்