இலக்கை அடைந்த ஆதித்யா எல்-1... பிரதமர் மோடி போட்ட ட்வீட்

x

ஆதித்யா எல்-1 விண்கலம் இலக்கை அடைந்திருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த வெற்றியின் மூலம் இந்தியா மற்றொரு மைல் கல்லை உருவாக்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். மிகவும் சவாலான மற்றும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில், நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிக்கு இது சான்றாக விளங்குவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த அசாதாரணமான சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து, தானும் பாராட்டுவதாக தெரிவித்துள்ள பிரதமர், மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து பின்தொடர்வோம் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்