6 வயது சிறுமியை கடத்திய பெண்..! துப்புகொடுத்த சிசிடிவி காட்சிகள்.. வலைவீசி தேடும் போலீஸ்..

x

கொல்லம் ஓயூர் பகுதியை சேர்ந்த ரெஜி என்பவரது 6 வயது மகள் அபிகேல் சாரா ரெஜி, தனது சகோதரனுடன் வீட்டருகே டியூசனுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது வெள்ளை நிற காரில் வந்த மர்மநபர்கள், சாராவை தூக்கிச்சென்றதாக கூறப்படுகிறது. சிறுவனின் சத்தம் கேட்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவலளித்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கொல்லம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடத்தல் தொடர்பாக பணம் கேட்டு சிறுமியின் தாயாருக்கு செல்போனில் ஒரு பெண் பேசிய நிலையில், அந்த செல்போன் எண்ணை வைத்து கடத்தல் கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்