யானை காலில் பயங்கர அடி.. மருத்துவரின் மஸ்டர் பிளான் - மெல்ல மெல்ல நடக்கும் அதிசயம்
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே காலில் காயமடைந்த யானைக்கு பிரத்யேக காலணியை வடிவமைத்து வனத்துறை கால்நடை மருத்துவர் அசத்தியுள்ளார்
அங்குள்ள தொட்டஹரவே முகாமில் பராமரிக்கப்படும் 60 வயதான குமரி என்ற யானைக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள், மருந்து வைத்து கட்டு போட்டனர். உடனே அவிழ்ந்து விடும் வகையில் கட்டு இருந்ததால், யானைக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக காலணியை கால்நடை மருத்துவர் ரமேஷ் வடிவமைத்தார். இதையடுத்து யானையின் காலில் ஏற்பட்ட காயம் தற்போது குணமடைந்து வருகிறது. இதனால் யானைக்கு பிரத்யேக காலணி வடிவமைத்த கால்நடை டாக்டர் ரமேசை வனத்துறையினரும், வன ஆர்வலர்களும் பாராட்டி வருகிறார்கள்.
Next Story
