வானில் நிகழ்ந்த அரிய நிகழ்வு... வழக்கத்தை விட பெரிதாய் தெரிந்த நிலா

x

ஒரே மாதத்தில் 2வதாக வரும் பவுர்ணமி புளு மூன் என அழைக்கப்படுகிறது. பூமியை சுற்றும் நிலா, பூமிக்கு மிக அருகில் வரும் போது, அது சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. நிலா பூமியை நெருங்கும் போது, வழக்கத்தை விட 14 சதவீதம் பெரிதாக காணப்படும். 2-வது பவுர்ணமி மற்றும் பூமியை நெருங்கிய நிலை என நேற்று இரு அரிய நிகழ்வுகள் ஒன்றாக நிகழ்ந்தன. இந்த அரிய நிகழ்வை பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் வியப்புடன் கண்டு களித்தனர். இந்தியாவில், டெல்லி, பாட்னா, லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் தெரிந்த சூப்பர் மூனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இதேபோன்று, ஜப்பான், ஜெருசலேம், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் தெரிந்த சூப்பர் மூனை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்