பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த சிறுமி..நள்ளிரவில் திடீரென கேட்ட அழு குரல்..

x

கேரளாவில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமி, கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.கேரளா மாநிலம் கொச்சி ஆலுவாவில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அங்கு பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமி, நள்ளிரவில் திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. அலறியடித்துக் கொண்டு குழந்தையை உறவினர்கள் தேடிய போது, அருகில் உள்ள காலி இடத்தில் குழந்தை ரத்த காயங்களுடன் அழுது கொண்டிருந்தது அனைவரையும் திடுக்கிட செய்தது. சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவர உறவினர்கள் பேரதிர்ச்சிக்குள்ளானர்கள். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்