பழங்குடியினரை கௌரவப்படுத்தும் விழாவில் அவமரியாதையாக நடத்தப்பட்டனரா? - விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு

x

பழங்குடியினரை கௌரவப்படுத்தும் விழாவில் அவமரியாதையாக நடத்தப்பட்டனரா? - விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு

புதுச்சேரியில் பழங்குடியினரை கௌரவப்படுத்த நடத்தப்பட விழாவில், அந்த இன மக்களை தரையில் அமரவைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில், மத்திய அரசின் பழங்குடியினர் அமைச்சகம் சார்பில் பழங்குடியினர் கௌரவ தின விழா நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரையாடினார். விழாவுக்கு வந்திருந்த பழங்குடியின மக்கள் இருக்கைகள் இல்லாததால், தரையில் அமர்ந்தனர். விழாவுக்கு வந்திருந்த சிலர், பழங்குடியினருக்கான நிகழ்ச்சி எனக் கூறி, அவர்களை இழிவுபடுத்துவதாக அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து அவர்கள் அமர்வதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு, விழா தொடர்ந்து நடத்தப்பட்டது. துணைநிலை ஆளுநரும் முதலமைச்சரும் பங்கேற்ற விழாவில், பழங்குடியின மக்களை தரையில் அமரவைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சம்பந்தப்பட்டுள்ள துறைத் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்