உள்ளே துடிக்கும் 41 உயிர்கள்.. வேதனையில் போன் போட்டு பேசி உறுதி கொடுத்த பிரதமர் மோடி

x

உத்தரகண்டில் சுரங்கப்பாதை விபத்து மீட்புப் பணிகள் தொடர்பாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நிகழ்ந்த சுரங்கப்பாதை விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கித்தவித்து வருகின்றனர். இந்நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். மீட்புப் பணிகளுக்கு தேவையான உபகரணங்களை மத்திய அரசு வழங்குவதாகவும், மத்திய-மாநில அரசுகளின் பரஸ்பர ஒருங்கிணைப்புடன் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும் மோடி தெரிவித்ததாக, உத்தரகண்ட் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்