வெங்காயம் மீது 40 சதவீதம் ஏற்றுமதி வரி - மத்திய அரசு உத்தரவு | Onion Rate

x

வெங்காயம் மீது 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்கவும், பொதுமக்களுக்கு போதிய அளவில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனைக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு, வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்ட நிலையில் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டு சந்தைகளில் விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக உள்நாட்டு சந்தையில் வெங்காயம் அதிகளவில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், மூன்று லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு விடுவித்திருந்தது.


Next Story

மேலும் செய்திகள்