"எதிர்கால சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ள வேண்டும்" - பிரதமர் மோடி பேச்சு

எதிர்கால சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த உலகளாவிய செயல்பாடு அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
x
எதிர்கால சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த உலகளாவிய செயல்பாடு அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


கொரோனா தொடர்பான இரண்டாவது சர்வதேச கருத்தரங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின், அழைப்பின் பேரில் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய, பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போருக்கு துணையாகவும் எண்ணற்றவர்களின் வாழ்க்கையை காப்பாற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் பாரம்பரிய முறையிலான மருத்துவத்தை பயன்படுத்தியதாக குறிப்பிட்டார். 98 நாடுகளுக்கு  சுமார் 200 மில்லியன் கொரோனா தடுப்பூசியை இந்தியா வழங்கி இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். நெகிழ்வு திறன் கொண்ட உலகளாவிய விநியோகச் சங்கிலியை கட்டமைக்க வேண்டும் என தெரிவித்த பிரதமர், தடுப்பூசி மற்றும் மருந்துகள் சமமான கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இதற்காக உலக வர்த்தக அமைப்பின் விதிகள் மேலும் நெகிழ்வுத்திறன் கொண்டதாக மாற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எதிர்கால சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த சர்வதேச செயல்பாடு அவசியம் என்பது தெளிவாகத் தெரிவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்