#Breaking|| மரக்கடையில் பயங்கர தீ விபத்து : தீயில் கருகி 7 பேர் பலி!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியிலுள்ள போயிக்கூடா பகுதியில் பழைய பொருள்கள் விற்பனை செய்யும் மர கடை ஏற்பட்ட தீ விபத்து 7 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியிலுள்ள போயிக்கூடா பகுதியில் பழைய பொருள்கள் விற்பனை செய்யும் மர கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 10க்கும் மேற்பட்டோர் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் கடையிலேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை இந்த மரங்களில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளனர். தற்போது வரை 7 பேரின் உடல்கள் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளது கடை பகுதி முழுவதும் புகை மூட்டம் உள்ளதால் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்