தாம்பத்ய வல்லுறவை குற்றமாக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தாம்பத்ய வல்லுறவை குற்றமாக்க கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தாம்பத்ய வல்லுறவை குற்றமாக்க கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தாம்பத்ய வல்லுறவை குற்றமாக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆ.ஐ.டி. பவுண்டேஷன், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான விசாரணையில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், நாகரிக சமூகத்தில் அடிப்படை தூண்களாக விளங்கும் பெண்களின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாம்பத்ய வல்லுறவை குற்றமாக்க கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
Next Story
