இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் வேகமெடுக்கும் - தென் ஆப்பிரிக்க நிபுணர் எச்சரிக்கை
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் ஜூலியட் புல்லியம் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், இந்தியா உள்ளிட்ட 57 உலக நாடுகளுக்கு தற்போது பரவியுள்ளது. பிரிட்டனில் ஒமிக்ரான் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று, வெகு வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தென் ஆப்பிரிக்க தொற்றுநோய் ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜூலியட் புல்லியம் கூறியுள்ளார். மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத் துறையினர் இதற்கு தேவையான முன் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். கொரோனா நோய் தொற்றுதலுக்கு உள்ளாகி பின்னர் குணமடைந்தவர்கள் மத்தியில், இதர ரகங்களை விட, ஒமிக்ரான் ரகம் வேகமாக பரவுவதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் தற்போது தினசரி தொற்றுதல் எண்ணிக்கை 37,875 ஆக அதிகரித்துள்ளது.
Next Story
