குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு.. 2 பாகிஸ்தான் டுவிட்டர் கணக்குகள் மீது வழக்கு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு.. 2 பாகிஸ்தான் டுவிட்டர் கணக்குகள் மீது வழக்கு
x
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டதாக 5 நபர்கள் மீது தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்த ராணுவ அதிகாரிகளின் இறப்பு குறித்து தவறான மற்றும் அவதூறு செய்திகளை சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், விபத்து குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்ட இரண்டு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ட்விட்டர் கணக்குகள் மீது 4 பிரிவுகளில் தமிழக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக இந்த இரண்டு பக்கங்களில் வெளியிட்ட பதிவுகளை நீக்க கோரி டுவிட்டர் நிர்வாகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் எழுத திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் யூடியூபர் மாரிதாஸ் மீதும், கன்னியாகுமரி புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்