ஒமிக்ரான் பரவல், மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..

ஒமிக்ரான் விவகாரத்தில் மிக ஆபத்தான நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து பரிசோதிக்க வேண்டும் என, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்
x
ஒமிக்ரான் பரவல், மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.. ஒமிக்ரான் விவகாரத்தில் மிக ஆபத்தான நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து பரிசோதிக்க வேண்டும் என, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் மாநிலங்களில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நாடுகள் என வகைப்படுத்தப்பட்டு இருக்கக் கூடிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகளை விமான நிலையங்களிலேயே பரிசோதனை செய்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய காதாரத்துறை அமைச்சகம் சர்வதேச பயணிகளுக்கு வழங்கி இருக்கக்கூடிய வழிகாட்டுதலின்படி விமான நிலையங்களில் சோதனை நடைபெற வேண்டும் என்றும், ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் அதிகம் பரவும் தன்மை கொண்டதால் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்