300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்
பதிவு : நவம்பர் 28, 2021, 05:43 AM
300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்
300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்

300க்கும் மேற்பட்ட பாம்புகளிடம் இருந்து மக்களை காத்த பாம்புபிடி நிபுணர், மது போதையில் பாம்பை பிடித்த‌தால் பாம்பு கடித்து, பாம்புடனே உயிர்விட்டுள்ளார்.கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தின் கோடிஹாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் பூஜாரி. பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தின் ஒரு வீட்டில் சுமார் ஐந்தரை அடி நீளமுள்ள விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்ததை கிராம மக்கள் பசவராஜிடம் தெரிவித்துள்ளனர். மது போதையில் இருந்த அவர் வழக்கம்போல லாவகமாக பாம்பை பிடித்தாலும் அதை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விடுவதில் அலட்சியம் காட்டியுள்ளார். பாம்பை பையில் அடைக்காமல் கையிலே அவர் தூக்கிச்சென்றபோது சுமார் 5 முறை பாம்பு அவரை கடித்த‌தாக தெரிகிறது. இதனால் விஷம் தலைக்கேறிய நிலையில், அவர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பாம்பை விடாமல் கட்டியாக பிடித்துக்கொண்டவாறே அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

14 views

PRIME TIME NEWS || தேர்தல் தேதி அறிவிப்பு முதல் விராட், ரோகித் முன்னிலை வரை இன்று (26-01-22)

PRIME TIME NEWS || தேர்தல் தேதி அறிவிப்பு முதல் விராட், ரோகித் முன்னிலை வரை இன்று (26-01-22)

16 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

11 views

(26-01-2022)இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(26-01-2022)இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

30 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (26-01-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (26-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

20 views

வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சியில் கம்பீரமாக அணிவகுத்த வீரர்கள்...

வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சியில் கம்பீரமாக அணிவகுத்த வீரர்கள்...

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.