பூனை குறுக்கே சென்றதால் அச்சமடைந்த யானை - யானை மிரண்டதால் மக்கள் அச்சம்
கேரளாவில் கோயில் விழாவிற்கு யானை கொண்டு வரப்பட்ட நிலையில், குறுக்கே பூனை ஓடியதால் யானை அச்சமடைந்து, மிரண்டது.
கேரள மாநிலம் வெட்டிகவல என்ற பகுதியில் நடைபெற்ற கோயில் விழாவுக்காக, நெடுமங்காவு பகுதியில் இருந்து மணிகண்டன் என்ற யானை வரவழைக்கப்பட்டது. அப்போது ஆயூர் - கொட்டாரக்கரை சாலையில், திடீரென பூனை குறுக்கே ஓடியதால், அச்சமடைந்த யானை மிரண்டது. இதனால் அங்கிருந்த மக்கள் அச்சமடைந்த நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் யானை சாலை ஓரமாக ஒதுங்கியதை அடுத்து, போக்குவரத்து சரி செய்யப்பட்டு, அப்பகுதி சகஜ நிலைக்கு திரும்பியது.
Next Story