தடுப்பூசி செலுத்தியதால் கல்லூரி நிகழ்ச்சி - நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கொரோனா

தடுப்பூசி செலுத்தியதால் கல்லூரி நிகழ்ச்சி - நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கொரோனா
தடுப்பூசி செலுத்தியதால் கல்லூரி நிகழ்ச்சி - நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கொரோனா
x
தடுப்பூசி செலுத்தியதால் கல்லூரி நிகழ்ச்சி - நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கொரோனா

கர்நாடகாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட 66 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், மாணவர்களில் பலருக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன. இதையடுத்து, பரிசோதனையில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து கல்லூரியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தற்போது வரை வெளியாகியுள்ள முடிவுகளில் 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 130 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. இதனிடையே, மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கல்லூரியின் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்ட தைரியத்தில், சமூக இடைவெளியை சரிவர பின்பற்றாமல் பங்கேற்றதாகவும், இதுவே கொரோனா பரவலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்