வருகிற 29 - ல் குளிர்கால கூட்டத்தொடர் துவக்கம்

டெல்லியில் வருகிற 28 ஆம் தேதி, அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருகிற 29 - ல் குளிர்கால கூட்டத்தொடர் துவக்கம்
x
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் இதுவாகும். நவம்பர் 29 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். அமர்வின் போது அவை சுமூகமாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக இத்தகைய கூட்டங்கள் கூட்டப்படுகின்றன. 
உத்தரபிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வு, சமையல் எண்ணெய் விலை உயர்வு, காஷ்மீரில் பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள், விவசாயிகள் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி வன்முறை, கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடும். நாடாளுமன்றத்தின் முந்தைய அமர்வுகளைப் போலவே, குளிர்காலக் கூட்டத்தொடர் கோவிட் நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும்.


Next Story

மேலும் செய்திகள்