ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.
ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்
x
ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அமைச்சரவையில் மாற்றம் செய்யக்கோரி, சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியது. இதை தொடர்ந்து, அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் அசோக் கெலாட்டின் வீட்டின் ஆலோசனை நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் அஜய் மக்கான் பங்கேற்றார். இதையடுத்து, அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்த நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்றது. இதில், 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்ட நிலையில், அவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா 
பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்