புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்புகள் - ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை

புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்புகள் மத்திய குழு நேரில் ஆய்வு செய்ய உள்ள நிலையில் , அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து ஆலோசலை நடத்தினார்.
புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்புகள் - ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை
x
கனமழை காரணமாக புதுச்சேரியில் மழைவெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.  விளைநிலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் சேதமடந்துள்ளன. இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு வரும் திங்கட்கிழமை புதுச்சேரி வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மழை வெள்ள பாதிப்புக்கான மத்திய அரசின் நிதியுதவியை கோருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்