மோசமான காலகட்டத்தில் இந்திய சீன உறவுகள் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரை

மோசமான காலகட்டத்தில் இந்திய சீன உறவுகள் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரை
மோசமான காலகட்டத்தில் இந்திய சீன உறவுகள் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரை
x
மோசமான காலகட்டத்தில் இந்திய சீன உறவுகள் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரை

இந்தியா, சீனா உறவுகள், முன் எப்போதும் இல்லாத அளவில், மோசமான காலகட்டத்தில் உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.எல்லைப் பிரச்சனை தொடர்பாக, இந்தியா சீனா இடையே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களை சீனா மீறியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இவற்றை மீறியது குறித்து சீனாவால் தெளிவான விளக்கங்களை அளிக்க முடியவில்லை என்பதால், இரு நாட்டு உறவுகள் மிக மோசமான காலகட்டத்தை எட்டியுள்ளதாக கூறினார். சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியை பல முறை சந்தித்து, இந்தியாவின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார். தஜிகிஸ்கானில், சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பில், கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை, இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில், பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 

Next Story

மேலும் செய்திகள்