இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமநிலை? - ராணுவத்தின் நிரந்தர கமிஷனில் பெண்கள்

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமநிலை உறுதியாகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தகுதியுள்ள அனைத்து பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் பணி வழங்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் இந்திய ராணுவம் உறுதியளித்துள்ளது.
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமநிலை? - ராணுவத்தின் நிரந்தர கமிஷனில் பெண்கள்
x
தற்போது இந்திய ராணுவ பாதுகாப்பு படையில் பணியாற்றும் பெண்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். இதுவே அமெரிக்கா போன்ற நாடுகளில் ராணுவத்தில் இருக்கும் பெண்கள் 10 முதல் 20 சதவீதத்திற்கும் மேல்.  

பல ஆண்டுகளாகவே இந்திய ராணுவத்தில் பெண்கள் நிரந்தரமாக பணியாற்ற முடியாத சூழ்நிலையே இருந்தது. அதிலும் ராணுவத்திலுள்ள மருத்துவ பிரிவிலேயே பெண்கள் அதிகம் பணியமர்த்தப்பட்டு வந்தனர்.
 
1992 முதல் ராணுவத்தில் ஐந்தாண்டு  குறுகிய கால சேவைக்கு மட்டும் பெண்கள் நியமிக்கப்பட்டனர்.

பின்னர் அந்த சேவை கடந்த 2006ல்  14 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. 

இந்த நிலை கடந்த 2008ஆம் மாற்றியமைக்கப்பட்டது. 
ராணுவத்தில் உள்ள சில குறிப்பிட்ட பிரிவுகளில் பெண்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டனர். 

ஆனால் ஆண் அதிகாரிகள் 10 ஆண்டு குறுகிய கால சேவை  பணியை நிறைவு செய்ததும், தகுதி அடிப்படையில் நிரந்தர கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம். 

ஆனால் உடல் தகுதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி, பெண்களால் நிரந்தர கமிஷனில் இடம்பெற முடியாது என்ற நிலையே நீடித்தது. 

நிரந்தர கமிஷன் தொடர்பான முதல் மனு 2003 இல் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், 2019ல் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் பணி வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது. 

ஆனால், இதற்கு இந்திய ராணுவம் ஒத்து கொள்ளவில்லை 
2020ல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு மனுவில், பெண் அதிகாரிகளுக்கு ராணுவத்தில் நிரந்தர பணி வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

ராணுவப் பணிக்கான மதிப்பீட்டில் 60 சதவீதம் பூர்த்தி செய்யும் பெண் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இதன் மூலம் இந்திய ராணுவத்தின் மொத்த 10 பிரிவுகளிலும் குறுகிய கால சேவை கமிஷனில் உள்ள பெண் அதிகாரிகளை நிரந்தரமாக நியமிக்க இந்த உத்தரவு வழி வகை செய்தது. 

இதன் மூலம் இனி ராணுவத்தில் உள்ள பெண்கள் 54 வயது வரை பணியாற்ற முடியும், மேலும் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என கூறப்பட்டது. 

ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசும், ராணுவமும் காலம் தாழ்த்தி வந்ததால், 11 பெண் ராணுவ அதிகாரிகள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, இந்த விவகாரத்தை நீட்டிக்க விரும்ப வில்லை என இந்திய ராணுவம் தெரிவித்தது.

இதனையடுத்து, நீதிமன்றத்தை அணுகிய11 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு 10 நாட்களுக்குள் நிரந்தரப் பணி வழங்கப்பட வேண்டும் என்றும், 

மீதமுள்ள பெண் அதிகாரிகளுக்கு 3 வாரங்களுக்குள் நிரந்தரப் பணி அளிக்கப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்