"புதிய தலைமைச் செயலாளரை மாற்றவும்" - அமித்ஷாவுக்கு மிசோரம் முதல்வர் கடிதம்

தங்கள் அமைச்சர்களுக்கு இந்தி தெரியாது என்பதால் புதிய தலைமைச் செயலாளரை மாற்றுமாறு மிசோரம் முதலமைச்சர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
புதிய தலைமைச் செயலாளரை மாற்றவும் - அமித்ஷாவுக்கு மிசோரம் முதல்வர் கடிதம்
x

மிசோரமின் தலைமைச் செயலாளராக இருந்த லால்னு மாவியா சாகோ சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, ரேணு சர்மா என்பவரை புதிய தலைமைச் செயலாளராக கடந்த மாதம் 29ம் தேதி, உள்துறை அமைச்சகம் நியமித்தது. ரேணு சர்மாவுக்கு மிசோ மொழி தெரியாததால் நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மிசோரம் முதல்வர் சோரம் தங்கா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், தங்கள் அமைச்சர்களுக்கு இந்தி, ஆங்கிலத்தை புரிந்துகொள்வதிலும் சிக்கல் இருப்பதாகவும், புதிய தலைமைச் செயலாளர் மிசோ மொழி தெரியாமல் பணியாற்றினால் நிர்வாகச் சிக்கல் ஏற்படும் என்றும் கூறி உள்ளார். மிசோ மொழி தெரிந்த நபரை தலைமைச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்