"அபார்ட்மென்ட்களில் செல்ல பிராணிகள் வளர்க்கலாம்"; "குடியிருப்பு சங்கங்கள் தடை விதிக்க முடியாது" - கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்ல பிராணிகளை வளர்க்கலாம் என்றும் குடியிருப்பு சங்கங்கள் இதனை தடை செய்ய முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அபார்ட்மென்ட்களில் செல்ல பிராணிகள் வளர்க்கலாம்; குடியிருப்பு சங்கங்கள் தடை விதிக்க முடியாது - கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
x
அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்ல பிராணிகளை வளர்க்கலாம் என்றும் குடியிருப்பு சங்கங்கள் இதனை  தடை செய்ய முடியாது என்று  கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், வாழ்விடங்களில் செல்லப்பிராணிகள் இருப்பதாகவும், அவற்றின் உரிமைகளை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளது. விலங்குகளுடன் வாழும் மனப்பான்மையை மக்களிடம் ஏற்படுத்த மாநில அரசும், பிற நிர்வாகங்களும் முயற்சிக்க வேண்டும் என்றும், இதற்காக பள்ளி அளவில் இருந்து விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே சமயம், குடியிருப்புகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் போது, அக்கம் பக்கத்தினருக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கியுள்ளது. மேலும்  குடியிருப்பு சங்கங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப்பிராணிகளை வளர்க்க தடைவிதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்