தீபாவளி - அகல் விளக்கு விற்பனை மும்முரம்... சாலையோரத்தில் குவிக்கப்பட்டுள்ள விளக்கு

தீபாவளியை முன்னிட்டு அகல்விளக்கு விற்பனை தீவிரமடைந்துள்ளது.
தீபாவளி - அகல் விளக்கு விற்பனை மும்முரம்... சாலையோரத்தில் குவிக்கப்பட்டுள்ள விளக்கு
x
 தீப ஒளி திருநாளில் வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அகல் விளக்கு விற்பனை களைகட்டியுள்ளது. ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் சாலையோரங்களில் கடை அமைத்து அகல்விளக்குகளை விற்பனை செய்து வருகின்றனர். பல்வேறு வண்ணங்களில், விதவிதமான வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ள அகல்விளக்குகளை பெண்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். கொரோனாவுக்கு பின் விற்பனை மந்தமான நிலையில், இந்த ஆண்டு நல்ல விற்பனை இருக்கும் என மண்பாண்ட தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்