"முல்லை பெரியாறு அணை : கேரளத்தில் தவறான பிரசாரம்" - தமிழக அரசு
முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரள மாநிலத்தில், சமூக வலைத்தளங்களில் தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது.அப்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாஹ்ட்டி, முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பை மணிக்கு ஒரு முறை மத்திய நீர்வள ஆணையத்தின் கீழ் செயல்படும் குழு கண்காணித்து வருகிறது என்றார். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் இன்று 137.6 அடியாக இருப்பதாகவும், மழைப்பொழிவு குறைந்து விட்டதால் மனுதாரர்களின் அச்சம் தேவையற்றது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. மேலும், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரளத்தில் சமூக வலைத்தளங்களில் தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக தமிழக அரசு வாதிட்டது. தமிழகத்துக்கு எதிராக இல்லை என்றும், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரம் கேரளத்திடன் இருக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணையை வியாழக்கிழமைக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது
Next Story