மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்தண்டனை - புதுச்சேரி நீதிமன்றம்
புதுச்சேரியில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை அளித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
தர்மாபுரி பகுதியைச் சேர்ந்த ஜெயசுகர் என்பவர் தனது மனைவி ஜெல்சி பிரின்சில்லாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மனைவியை கொலை செய்த ஜெயசுகருக்கு ஆயுள் தண்டனையும் கொலையை மறைத்ததற்கு ஓராண்டு சிறையும், பொய் புகாருக்கு 3 மாத சிறையும், 6 ஆயிரத்து100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், கொலையை மறைக்க உதவிய ஜெயசுகரின் நண்பர்கள் ராமமூர்த்தி, முத்துராஜ் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story