அடுக்குமாடி கட்டிடத்தில் தீ - புகை மண்டலமாக காட்சியளித்த பகுதி
மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் 19வது மாடியில் இருந்து குதித்த ஒருவர் உயிரிழந்தார்.
மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் 19வது மாடியில் இருந்து குதித்த ஒருவர் உயிரிழந்தார். பரேல் பகுதியில் கரி சாலையில் உள்ள அவிக்னா பார்க் குடியிருப்பில் இன்று நண்பகல் 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு புகை வெளியேறியது. தீ பரவியதால் மக்கள் அலறியடித்தபடி உடனடியாக வெளியேறியதால் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக கரி சாலை பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் 19வது மாடியில் இருந்து குதித்த ஒருவர் உயிரிழந்தார்.
Next Story