100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியா- உலகிலேயே 2வது நாடு என சாதனை

இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியா- உலகிலேயே 2வது நாடு என சாதனை
x
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் முன்களப்பணியாளர்களுக்கு மட்டும் போடப்பட்ட நிலையில், பின்னர் படிப்படியாக முதியவர்கள், 45 வயதுக்கும் மேற்பட்டோர், கடைசியாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவ்வப்போது தட்டுப்பாடு நிலவினாலும், உற்பத்தி அதிகரித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்தது. இதன் பலனாக, இன்று காலை 10 மணியளவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி என்ற மைல்கல் எட்டப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. உலகிலேயே 100 கோடி டோஸ் செலுத்திய 2வது நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்