25 வயது பெண்ணை மணமுடித்த 45 வயதான நபர் - கர்நாடகாவில் நடந்த சம்பவம்

கர்நாடகாவை சேர்ந்த 45 வயதான நபர், 25 வயதான பெண்ணை திருமணம் செய்திருக்கும் நிலையில் இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது...
25 வயது பெண்ணை மணமுடித்த 45 வயதான நபர் - கர்நாடகாவில் நடந்த சம்பவம்
x
பொதுவாக காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்... ஆனால் காதலுக்கு வயதும் இல்லை.. அது தேவையும் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது இந்த சம்பவம்...

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இதனிடையே 2 ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன் அதன்பிறகு வீடு திரும்பவே இல்லை. கணவனை காணாமல் தவித்துப் போனார் மேகனா. காணாமல் போன கணவன் மீண்டும் வராததால் தனியாகவே வாழ்ந்து வந்தார்...

இந்த சூழலில் மேகனாவுக்கு சிக்கதனேகுப்பே என்ற கிராமத்தை சேர்ந்த 45 வயதான சங்கரண்ணா என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது....

தமிழில் வெளியான விடுகதை படத்தின் காட்சிகளை போலவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதித்தனர். மேகனாவும், சங்கரண்ணாவும் இந்த விவகாரத்தை தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறி அனுமதியும் பெற்றனர். 

இதையடுத்து சிக்கதனக்குப்பே கிராமத்தில் உள்ள கோயிலில் வைத்து இருவருக்கும் எளிமையாக திருமணமும் நடந்தேறியது... இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்