"பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கொரோனாவே காரணம்" - கர்நாடக அமைச்சர் விளக்கம்

நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கொரோனாவே காரணம் என்று கர்நாடாக மாநில அமைச்சர் உமேஷ் விஸ்வநாத் கத்தி தெரிவித்திருக்கிறார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கொரோனாவே காரணம் - கர்நாடக அமைச்சர் விளக்கம்
x
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 109 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் டீசலும் லிட்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்குநாள் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, கர்நாடக மாநில, உணவு வழங்கல் துறை அமைச்சர் உமேஷ் விஸ்வநாத் கத்திவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கொரோனாவே காரணம் என்றும், கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு அரசுக்கு நிதி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். நிதிச்சுமையை சமாளிக்கவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்