குஷிநகர் சர்வதேச விமான நிலையம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

உத்தர பிரதேச மாநிலம், குஷிநகரில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்
x
புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள குஷி நகர், சர்வதேச புத்தமத யாத்திரை தலமாக விளங்குகிறது. இங்கு சர்வதேச விமான நிலையம் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாகவும், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் வகையிலும் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி,  குஷிநகர் விமான நிலையத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முதல் விமானமாக குஷிநகர் விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகரான கொழும்பு நகரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்த துறவிகளுடன் வந்த விமானம் தரையிறங்கியது.


Next Story

மேலும் செய்திகள்