நீதிமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரம் - வழக்கறிஞர் கொடூரமாக சுட்டுக்கொலை

உத்தரபிரதேசத்தில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
நீதிமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரம் - வழக்கறிஞர் கொடூரமாக சுட்டுக்கொலை
x
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் நீதிமன்றம் உள்ளது. இங்கு 3வது மாடியில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கவே, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சென்று பார்த்த போது, வழக்கறிஞர் பூபேந்திர சிங் என்பவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரின் அருகே நாட்டு துப்பாக்கி ஒன்றும் கிடந்தது. இந்த சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது பூபேந்திர சிங்கின் அருகே நின்று கொண்டிருந்த நபர் திடீரென சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் கொலை செய்தவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் ரவுடி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரிதும் பேசப்பட்டது. இப்போது உத்தரபிரதேசத்தில் அதே பாணியிலான சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... Next Story

மேலும் செய்திகள்