கேரளாவில் தொடர்மழையால் பாதிப்பு- இடுக்கி புல்லுப்பாறை அருகே மண் சரிவு

கேரளாவில் தொடர்மழையால் பாதிப்பு- இடுக்கி புல்லுப்பாறை அருகே மண் சரிவு
கேரளாவில் தொடர்மழையால் பாதிப்பு- இடுக்கி புல்லுப்பாறை அருகே மண் சரிவு
x
கேரளாவில் தொடர்மழையால் பாதிப்பு- இடுக்கி புல்லுப்பாறை அருகே மண் சரிவு 

கேரளாவில் தொடர்மழை காரணமாக இடுக்கி புல்லுப்பாறை அருகே மண் சரிவு ஏற்பட்டதால்  தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  கொல்லத்திலும் கனமழை தொடர்கிறது. தொடர் மழையால் அருவிக்கரை அணையில் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திருச்சூரில் உள்ள சோலையார் அணை தவிர அனைத்து அணைகளும் திறக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி புல்லுப்பாறை அருகே மண் சரிவு ஏற்பட்டதால் கொட்டாரக்கரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்மலை ஆரியங்காவு சாலையிலும்  நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.பின்பு மண் அகற்றப்பட்ட பிறகு போக்குவரத்து தொடங்கியது.  பத்தனம்திட்டாவிலும் கனமழை தொடர்கிறது. மாவட்டத்தில் உள்ள  தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  மழை நிலவரம் குறித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்