திருமலையில் அதி நவீன பூந்தி தயாரிப்பு மையம் - தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன்

திருமலையில் அதி நவீன பூந்தி தயாரிப்பு மையம் - தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன்
திருமலையில் அதி நவீன பூந்தி தயாரிப்பு மையம் - தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன்
x
திருமலையில் அதி நவீன பூந்தி தயாரிப்பு மையம் - தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் 

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, எடைக்கு சமமாக 78 கிலோ அரிசியை ஏழுமலையானுக்கு துலாபாரம் காணிக்கை செலுத்தினார்.கருடசேவை முன்னிட்டு ஆந்திர அரசு சார்பில் ஏழுமலையானுக்கு நேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு தங்கிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று காலை மீண்டும் ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். முன்னதாக தன்னுடைய உடல் எடைக்கு சமமாக எழுபத்தி எட்டு கிலோ அரிசியை ஏழுமலையானுக்கு அவர் துலாபாரம் காணிக்கை செலுத்தினார். இதை தொடர்ந்து தேவஸ்தான தொலைக்காட்சியின் இந்தி மற்றும் கன்னட  மொழி ஒளிபரப்புகளை துவக்கி வைத்தார். பின்னர், தினமும் 6 லட்சம் லட்டுகள் தயார் செய்யும் வகையில் இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் சீனிவாசன் 12 கோடி ரூபாய் நன்கொடையில் கட்டித்தந்துள்ள பூந்தி தயாரிக்கும் மையத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி  திறந்து வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்