"பிரியங்கா காந்தியை விடுதலை செய்க" - பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து டுவிட்டரில் பதிவு

மத்திய இணை அமைச்சரின் மகன் கைதாகவில்லை என்றால் லக்கிம்பூருக்கு பேரணியாக செல்வோம் என சித்து அறிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தியை விடுதலை செய்க - பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து டுவிட்டரில் பதிவு
x
பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், காரை ஏற்றி விவசாயிகளை கொன்ற மத்திய இணை அமைச்சரின் மகன் கைதாக வேண்டும் என்றும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அப்படி செய்யாத பட்சத்தில், பஞ்சாப் காங்கிரஸ் தொண்டர்களுடன் லக்கிம்பூர் பகுதிக்கு பேரணியாக செல்ல உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்