ஸ்வமித்வா திட்டம் இன்று துவக்கம் - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
மத்தியப் பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டப் பயனாளிகளுடன் இன்று பிரதமர் கலந்துரையாட உள்ளார்.
இந்த திட்டத்தின் பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 300 பயனாளிகளுக்கு இ-சொத்து அட்டைகளையும் பிரதமர் வழங்கவுள்ளார். இந்த நிகழ்வில் மத்தியப்பிரதேச முதலமைச்சரும் பங்கேற்கிறார்.
Next Story