"பொதுமக்களிடம் அத்துமீறினால் கடும் நடவடிக்கை" - கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

"பொதுமக்களிடம் அத்துமீறினால் கடும் நடவடிக்கை" - கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
பொதுமக்களிடம் அத்துமீறினால் கடும் நடவடிக்கை - கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
x
"பொதுமக்களிடம் அத்துமீறினால் கடும் நடவடிக்கை" - கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை 
 
பொதுமக்களிடம் போலீசார் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறாக நடந்து கொள்ளும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கொச்சி தெற்கு போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி சந்தோஷ் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமக்களை எப்படி கையாள்வது என்பதை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும், பல முறை கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு  காவல்த்துறையினர்  இணங்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் பொதுமக்களிடம் அத்துமீறும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தை, சரியாக கையாள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்