4 நாடுகளின் குவாட் கூட்டமைப்பு... 120 கோடி தடுப்பூசிகளை அளிக்க திட்டம் - இந்தோ பசிபிக் நாடுகளுக்கு அளிக்கப்படும்

குவாட் நாடுகளின் கூட்டமைப்பு 120 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
4 நாடுகளின் குவாட் கூட்டமைப்பு... 120 கோடி தடுப்பூசிகளை அளிக்க திட்டம் - இந்தோ பசிபிக் நாடுகளுக்கு அளிக்கப்படும்
x
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பான குவாட் கூட்டமைப்பு, 120 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை, தடுப்பூசி பற்றாகுறை உள்ள நாடுகளுக்கு அனுப்பப் போவதாக அறிவித்துள்ளது.

இந்தோ பசிபிக் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும், இதர நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் கோவேக்ஸ் திட்டத்தின் மூலமும், இதர வழிகளிலும் தடுப்பூசிகள்
அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை 7.9 கோடி தடுப்பூசிகளை இந்தோ பசிபிக் பகுதி நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக குவாட் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள்,  நூறு கோடி தடுப்பூசிகளை தயாரிக்க குவாட் நாடுகள் முதலீடுகளை அளிக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை
சேர்ந்த பையாலஜிக்கல் இ என்ற நிறுவனம், பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இறங்கியுள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் கொரோனா  தடுப்பூசி ஏற்றுமதியை  இந்தியா மீண்டும் தொடங்க உள்ளதற்கும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கூட்டணி நாடுகள், கொரோனா தடுப்பூசிகளை வாங்க, 24,357 கோடி ரூபாய் அளவுக்கு அவசர கால கடன் உதவிகளை ஜப்பான் அளிக்க உள்ளது. தடுப்பூசி கொள்முதல் செய்ய, தென் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதி நாடுகளுக்கு 1,565 கோடி ரூபாய் அளவுக்கு  ஆஸ்திரேலியா நிதி உதவி அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கொரோனா தடுப்பூசி விநியோக கட்டமைப்புகளை வலுப்படுத்த ஆஸ்திரேலியா 1,616 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்