"பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட மாட்டாது" - கேரள கல்வித்துறை அறிவிப்பு

கேரளாவில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட மாட்டாது எனவும், அதற்குரிய தொகை வழங்கப்படும் எனவும் கேரள கல்வித்துறை தெரிவித்துள்ளது
பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட மாட்டாது - கேரள கல்வித்துறை அறிவிப்பு
x
கேரளாவில் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, பள்ளிகளுக்கு முன்பு அமைந்துள்ள கடைகளில் மதிய உணவு சாப்பிட அனுமதி இல்லை எனவும், ஒரே பெஞ்சில் இரண்டு பேர் மட்டுமே அமர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நோய் அறிகுறி இருந்தால், பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்