"சுகாதார ஊழியர்களை தாக்கக் கூடாது" - கடுமையாக எச்சரித்த கேரள முதல்வர்

கேரளாவில் சுகாதாரத்துறை ஊழியர்களை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களை தாக்கக் கூடாது - கடுமையாக எச்சரித்த கேரள முதல்வர்
x
 சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், நலத் திட்டங்களை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்த அவர், கேரளாவின் சில பகுதிகளில் சுகாதார ஊழியர்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வதாக  கூ​றினார். கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள, கேரளா முழுவதும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். கேரளாவில் போதுமான சிகிச்சை பெறாதவர்கள் யாரும் இல்லை என்ற அவர், சுகாதார ஊழியர்களை தாக்குவது ஒட்டுமொத்த சமூகத்தையும் தாக்குவதற்கு சமம் என்றார்.



Next Story

மேலும் செய்திகள்