மன அழுத்தத்தை போக்க கேளிக்கை மையம்: கர்நாடக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை
கர்நாடகா எம்எல்ஏக்களின் மன அழுத்தத்தை போக்க யோகா, நீச்சல் குளம் உள்ளிட்டவை அடங்கிய கேளிக்கை மையம் அமைக்க கோரிக்கை மீண்டும் வலுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிறப்பு கிளப் உருவாக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருடன் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனை அரசும் ஏற்றுக் கொண்டு அதற்கான பணிகளை தொடங்க முடிவு செய்தது. அரசின் இந்த முடிவுக்கு பெரும்பாலான எம்எல்ஏக்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் சாலைகள் மிகவும் மோசமான சூழலில் உள்ளது. மேலும் கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதிகள் 50% கூட பயனாளர்களை சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இந்த சூழலில் எம்எல்ஏ களுக்கான சிறப்பு கிளப்பை ஏற்படுத்தும் விவகாரம் பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story