இந்தியா-நேபாளம் இடையே கூட்டு ராணுவ பயிற்சி: 14 நாள் பயிற்சியில் இருநாட்டு வீரர்கள் பங்கேற்பு

இந்தியா மற்றும் நேபாள நாட்டிற்கு இடையே நடைபெறும் 14 நாள் கூட்டு ராணுவப்பயிற்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடங்கியது.
இந்தியா-நேபாளம் இடையே கூட்டு ராணுவ பயிற்சி: 14 நாள் பயிற்சியில் இருநாட்டு வீரர்கள் பங்கேற்பு
x
சூர்ய-கிரன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ பயிற்சி இரு நாட்டிற்கும் இடையேயான ராணுவ உறவை பலப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோகரில் பயிற்சி மேற்கொளவதால் இந்தியாவுக்கு வருகை தந்த நேபாள ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் கலைநிகழ்ச்சியுடன் வரவேற்றனர்.  நேற்று தொடங்கிய15வது கூட்டு ராணுவ பயிற்சியில் இருநாட்டு வீரர்களுக்கும் தீவிரவாதிகளை எதிர்கொள்வது, எல்லையை பாதுகாப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்