"காலணியை எடுக்கவே அதிகாரிகள் உள்ளனர்" - முன்னாள் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

அரசியல்வாதிகளின் காலணியை எடுப்பதற்காகவே அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக முன்னாள் பாஜக அமைச்சரான உமாபாரதி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காலணியை எடுக்கவே அதிகாரிகள் உள்ளனர் - முன்னாள் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
x
மத்திய பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் பேசிய உமா பாரதி, அதிகாரத்துவம் என்பது ஒன்றுமே இல்லை என்றதுடன் அது அரசியல்வாதிகளின் காலணியை எடுப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது என கூறினார்.


அதிகாரிகள் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்துகின்றனர் என கூறுவது தவறு என்ற உமா பாரதி, பதவியில் உள்ள அரசியல்வாதிகள் தான் அதிகாரிகளுக்கு ஊதியம் தருவதாகவும் பணிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.


அதிகாரிகளால் ஒன்றுமே செய்ய முடியாது என்ற அவர், அரசியலுகாகவே அவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் விமர்சித்தார்.


உமா பாரதியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ், அதிகாரிகள் அரசியல்வாதிகளின் காலணியை எடுக்க தான் பயன்படுத்தப்படுகிறார்களா என்பதை முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்கான் விளக்க வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளது.


இதற்கிடையே தனது பேச்சுக்கு டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ள உமாபாரதி, அதிகாரத்தை பாதுகாக்கும் வகையில் பேசியதாகவும்


நேர்மையான அதிகாரிகள் நல்ல நோக்கமுள்ள அரசியல்வாதிகளுக்கு வலிமையான மற்றும் உண்மையான ஆதரவை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.


மேலும், அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனை என்றாலும் வரம்புக்கு மீறிய வார்த்தைகளை பயன்படுத்தியதால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக உமாபாரதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்