புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் - வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் - வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் முடித்து விட்ட நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 5 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளிலும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில்  10 லட்சத்து 3 ஆயிரத்து 255 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 202 பேர் ஆண்களும், 5 லட்சத்து 30 ஆயிரத்து 936 பெண் வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்