திருப்பதி கோவிலில் இலவச டோக்கன் - அனைத்து பக்தர்களுக்கும் வழங்கும் பணி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன் வினியோகிக்கும் பணி துவங்கியது.
திருப்பதியில் உள்ள சீனிவாசன் கட்டிட வளாகத்தில் இப்பணி நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக இலவச தரிசன முறை சில மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த 4 நாட்களாக பரிசோதனை அடிப்படையில் இலவச தரிசன டோக்கன் சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும், தினசரி 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, தங்களுக்கும் இலவச டோக்கன் தேவை என்று பிற மாநில பக்தர்களும் தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதனால், இன்று காலை முதல் இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் டோக்கன் வாங்குவதற்காக குவிந்துள்ளனர்.
Next Story