காலியான பஞ்சாப் முதல்வர் நாற்காலி - பஞ்சாபின் அடுத்த முதல்வர் யார்?

பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், பஞ்சாபின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காலியான பஞ்சாப் முதல்வர் நாற்காலி - பஞ்சாபின் அடுத்த முதல்வர் யார்?
x
காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், அந்த மாநில முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங் திடீரென ராஜினாமா செய்ததால், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி ஏற்பட்டு உள்ளது.

முதல்வர் பதவிக்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அம்பிகா சோனியை தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் விரும்புவதாகவும்,

ஆனால், உடல்நலனை சுட்டிக்காட்டி காங்கிரஸின் கோரிக்கையை அம்பிகா சோனி ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சீக்கியரே பஞ்சாபின் முதல்வர் பதவிக்கு வரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் குழப்பம் ஏற்படுமென்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, அம்பிகா சோனியை முதல்வராக தேர்வு செய்ய காங்கிரஸ் பரிசீலித்து வருவதாகவும், எம்.எல்.ஏக்களிடம் இது தொடர்பாக கருத்து கேட்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் மாநில தலைவர் சுனில் ஜாகர், அமைச்சர் சுக்ஜிந்தர் சிங், ஆகியோரும் முதல்வர் பதவிக்கான பந்தயத்தில் உள்ள நிலையில்,,..

பஞ்சாபின் அடுத்த முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்