கொரோனா மருந்து - வரிச்சலுகை நீட்டிப்பு
ரெம்டெஸிவர் உள்ளிட்ட கொரோனா மருந்துகளுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெஸிவிர், ஹெபாரின் உள்ளிட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்த மருந்துகள் மீதான வரியை குறைத்து கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது. இந்த வரிச்சலுகை செப்டம்பர் மாதம் வரை கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேற்கண்ட மருந்துகளுக்கான வரிச்சலுகை டிசம்பர் மாதம் வரை நீட்டித்து ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கொரோனா தொடர்புடைய பல்வேறு மருத்துவ சாதனங்களுக்கும் வரிச்சலுகை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மருத்துவ சாதனங்கள் தவிர்த்து, முக்கிய மருந்துகளுக்கு மட்டும் வரிச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த கிட்ரூடா என்ற உயிர் காக்கும் மருந்து மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும்,
மத்திய மருந்து துறையால் பரிந்துரைக்கப்பட்ட 7 வகை மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைத்து ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.இதனிடையே, முதுகு தண்டுவட சிதைவு நோய்க்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், 16 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட உயிர்காக்கும் மருந்துகளுக்கு, ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story